பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு245

Untitled Document
1395
5. பரிகலப் படலம்
ஐவரை மணந்தெம் கணவர் அடைந்த

315 துயரெலாம் இங்கே சொல்லி முடியுமோ!
இவரின் ஒருத்தியாய் எளியேன் அடைந்த
குறையெலாம் இங்கே கூறி முடியுமோ!
ஒருநாள்
வெட்கம், வெட்கம், மிகவும் வெட்கம்!

320 துக்கம் துக்கம் பெரிதும் துக்கம்!
மனமும் நாணி வருந்துதே அம்மா!
நாவும் குழறி நடுங்குதே அம்மா!
எப்படிச் சொல்வேன்! யாவற் றிற்கும்
என்தலை விதியை யன்றியிவ் வுலகில்

325 எவரை நோக இடமுண் டம்மா!
தீபா வளியோ திருக்கார்த் திகையோ,
நன்றாய் எனக்கு ஞாபக மில்லை;
வீட்டில் ஏதோ விசேஷ முண்டு;
வீரவ நல்லூர் விருந்து முண்டு;

330 பருப்பு முதலிய பற்பல கறிகள்
வகைவகை யாக வைத்தது முண்டு.
வந்த மனிதரும் எங்கள் மன்னரும்
அமுது செய்துகை அலம்ப வெளியில்
இறங்கினர். உடனே, எனக்கு முன்னால்

335 வாழ்க்கைப் பட்ட மனைவிய ருக்குள்
இழுப்பும் வலிப்பும் எதிர்ப்பும் வந்தன;
அடியும் பிடியும் கடியு மாயின.
மனிதப் பிறவியில் வந்தவரா மென்று
எள்ளள வேனுமோர் எண்ண மிலாதவர்

340 கொண்டை பற்றிச் சண்டை செய்தனர்!
மண்டை ரத்தம் வடிய விட்டனர்.
என்னால்
ஆன மட்டும் விலக்கினேன், அம்மா!
ஆகா தாகா தென்றேன், அம்மா!