பக்கம் எண் :

248கவிமணியின் கவிதைகள்

Untitled Document
6. நாகாஸ்திரப் படலம்
1396 இம்முறை யாக இருக்கும் காலம், எம்
கணவரை ஒருநாள் மருமகன் கண்டு
வழக்குப் பேச வந்தான் அம்மா!
வந்தவன்,

395 அம்மான் என்றோர் அடக்கமில் லாமல்
மாமன் என்றோர் வணக்கமில் லாமல்,
கூறின மொழியெலாம் கூறுவேன், அம்மா!
"ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ?

400 விளையை நிலமாய் வெட்டித் திருத்த
பனையை விற்ற பணம் போதாதோ?
கண்ணி யம்மை கலியா ணத்தில்
கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ?
மருமகள் என்றொரு மஞ்சா டிப்பொன்

405   குச்சா கிலும்நீர் கொடுத்ததும் உண்டோ?
ஆண்டு தோறும் ஆதா யத்தில்
ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே!
ஏழாண் டாக இந்த மிச்சம்
எங்கே போச்சுது? என்னடா, அப்பா!

410   கேட்பா ரில்லையோ, கேள்வியு மில்லையோ!
நெட்டர மாவும் நெடுங்கண் வயலும்
யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்?
கடனுக் கென்ன காரணம்? சொல்லும்.
ஊரில் காரிய விசாரம் உமக்கு

415   வேண்டாம் என்றேன்; 'விடுவனோ' என்றீர்.
கணக்கன் உமது கழுத்து முறிய
எல்லாச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால்,
அம்மன் வகைக்கீ ராயிரம் ரூபாய்
தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ?
420   உச்சிக் கொடைக்குப் பூச்சி வெள்ளையும்
கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு