பக்கம் எண் :

250கவிமணியின் கவிதைகள்

Untitled Document

455   இரவும் பகலும் இஷ்டம் போலத்
திருடும் திறம்இச் சீமையில் எவருக்கு
உண்டு? இதனை உணர்பவ ருண்டோ?
கள்ளன் கஜானாக் காவலன் ஆனால்,
கொள்ள யடிப்பில் குறைவைப் பானோ?

460   செல்வ மெல்லாம் சிதையக் காரணம்,
சிறுவர் சோம்பித் திரியக் காரணம்,
மங்கையர் கண்ணீர் வடிக்கக் காரணம்,
வழக்குகள் மேன்மேல் வளரக் காரணம்,
குடும்ப நிலைமை குலையக் காரணம்,

465   நாஞ்சில் நாட்டுக்கோர் நாச காரணம்
எல்லாம் நீங்கள் என்றறிந் தல்லவோ
காரண வர்எனும் காரணப் பெயரைத்
தந்தனர் உமக்கும் அந்தக் காலமே.
காரணத் தீனம் கடிய தீனம்;

470   கண்டூரத்தில் மருந்து கருத்தாய்க்
கொடுத்தா லன்றிக் குணமா காது.
போகர் மச்ச முனிபுலிப் பாணியர்
கருணா னந்தர் கருவூர்த் தேவர்
அகத்தியர் முதலிய ரிஷிகள் அனைவரும்

475   வைத்தியம் மந்திர வாதம் இவற்றைப்
பாட்டுக் கணக்காய்ப் பாடி வைத்தனர்!
ஏட்டுக் கணக்காய் எழுதி வைத்தனர்!
இவரும், காரணத் தீனம் இன்னதென்று
அறிந்தொரு குளிகை லேகியம் அல்லது

480   சூரணம் அதற்குச் சொன்ன தும் உண்டோ?
அஷ்டாங் கிருத வைத்தியர், 'ஐயா
எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது,
எங்கள் நாட்டில் இப்பிணி யாலே
வருந்தா திருக்கும் மனிதர் சிலரே;

485   இதுநாள் வரையும் இப்பிணி தீர,
கஷாய மொன்று கண்டறிந் தவரிலை;