பக்கம் எண் :

258கவிமணியின் கவிதைகள்

Untitled Document

705   தாயப் போர்க்கொரு தடைசெய் யாமல்,
குடித்தன மில்லாக் குறிகள் அறிந்து,
தடித்தன மில்லாச் சமயம் பார்த்து,
'அரசே! பெருந்திரு அமுதுக் காக
இம்மா தத்துக்கு ஏற்படும் நெல்லிதை

710   அளந்து களஞ்சியத்து ஆக்கிடக் கற்பனை
பாலித் தருள்வீர்' என்று பணிந்து
நிற்கும் படிக்கு நீயும் 'கோர்ட்டு'த்
தீர்ப்பைப் பெற்றுச் சீக்கிரம் வா, போ!
உள்ளநா ளெல்லாம் உங்கட் காகநான்

715   உழைத்தது இந்த ஊர் அறியாதோ!
பொண்டாட் டிக்கும் பிள்ளை கட்கும்
இத்தனை நாளாய் எத்தனை கொடுத்தேன்?
உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
கொடுத்தால் என்ன? குறைவாய் விடுமோ?

720   அடிமைகள் போல் இவர் அத்தனை வேலையும்
செய்வதும் உனக்குத் தெரியா தோடா?
'வயலைப் பார்த்து வா'எனில், 'கிழட்டுப்
பயலே! உனக்குப் பயித்தியம்' என்பாய்!
'கொத்தை அளந்து கொடு' என்றால் 'நீ

725   வைத்த ஆளோ? மாட்டேன்' என்பாய்!
போன பூவில் புளியடிச் சூடு
வட்டம் தள்ளி வரும்போது உன்னிடம்
'களத்தில் சென்று கண்காணி' என்றேன்;
அந்தப் படியே அவ்விடம் சென்றுநீ

730   நிமிஷப் பொழுதில் நெல்அரைக் கோட்டை
கடத்தி விட்ட கதையும் எனக்குத்
தெரியா தோடா? திருட்டுப் பயலே!
மறுநாள்,
விடியற் காலம் விசாரிப்புக் காரன்
சாக்கும் இருபதாம் நம்பர் 'ஷாப்பில்'
இருந்தது கண்டுவந்து என்னிடம் சொன்னான்;