பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு27

Untitled Document
27. திருக்குறள்
134 மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டிநலம் செய நூலாம் - மிக்க புகழ்ச்
செந்தமிழ் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்.


வேறு
135   சங்கப் பலகையிலே - அன்று
     தனிய மர்ந்த நூலாம்
பங்கய நான் முகனே - தமிழில்
     பகர்ந்த மாமறையாம்.

136   ஆதி மனுநூலைத் - திருத்தி
     அமைந்த நன்நூலாம்;
நீதி எடுத்தோதப் - புவியில்
     நிகரி லாநூலாம்.

137   புத்தகக் காட்டினிலே - புகுந்து
     புத்தி மயங்குவதேன்?
பத்தியோ டிந்நூலை - நிதமும்
     படித்தல் போதுமையா!

138   ஓதி அறம் தெரிவீர் - பொருளின்
     உண்மை உணர்ந்திடுவீர்;
காதலின் காட்சியெல்லாம் - நன்கு
     கண்டு களித்திடுவீர்.


28. கம்பன்
139   ஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின்
     ஆழம் அளந்துகண் டோன்;
மாரி மழைபோலக் - கவியின்
     மழைபொ ழிந்திடு வோன்.

140 அயன்ப டைப்பினையும் - திருத்தி
     அழகு செய்திடு வோன்;
நயம்தெரிந்துகதை - நடத்தும்
     நாட கக்கவி ஞன்.