Untitled Document | 1130 | | குட்டிச் சுவரெல்லாம் குதித்துச் சாடி வாய்க்கால் வழியாய் வடக்கே யோடி, ஒருவரும் காணாது ஓச்சன் குளத்து மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும், 'சாமி சுடலை சாம்பலி லாடி | | 1135 | | விளையா டுவதற்கு வேகமாய்ப் போகிறார்' என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம் எழுந்து போனதும், எங்கும் தேடிக் காணா தானதும், கடைசியில் உண்மை தெரிய வந்ததும், செலவோடு செலவு என்று | | 1140 | | ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து வாறண்டை அன்று மடக்கி விட்டதும் நடந்த காரியமோ? நாடகந் தானோ? வியாச்சியம், வேண்டாம், வியாச்சியம் வேண்டாம்; தேடின முதலைத் தெருவில் வாரி | | 1145 | | இறைக்க வேண்டாம்; இறைக்க வேண்டாம். அல்லும் பகலும் அலுப்பில் லாமல் ஆஆ என்று அலை ஆமீன் வாயில் அகப்பட் டார்வெளி யாவது முண்டோ? சுறா மீனையுமே தூக்கி விழுங்கும் | | 1150 | | பொல்லா மீன் இது போலோரு மீனைக் கடலினும் கூடக் கண்டவ ரில்லை. 'எவரினும் பெரியவன் யானே ஆவேன்; எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்; இம்மிரு கத்தையும் எடுத்தொரு நொடியில் | | 1155 | | வானெல்லாம் சுற்றி வருவதற் குள்ள ஆற்றலு முடையேன்; ஆனால், அத்திறம் அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட அற்பமும் ஆசை என்கில்லை; அன்றியும் உருவமோ நீளமோ உயரமோ கண்டே | | 1160 | | மூட உலகம் மோசம் போகும்; ஆதலால் ஒருவரும் அறியா திருந்துஇந் |
| |
|
|