பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு283

Untitled Document
10. யாத்திரைப் படலம்
1405 மூன்று மாதம் முன்னதாகவே
1445 மனைவியர் இருவர் மாண்டு போயினர்;
நாலாம் மனைவி நாடகக் காரியும்
விடுமுறி போட்டு விலகி விட்டனள்,
ஒருத்தி, பாவம், ஒருகதி யில்லாள்
நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள்,
1450 பெற்றும் மலடி, பேசா மடந்தை
எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா!
எழுந்து நடக்க இயலா தாகிப்
பாயிற் கணவர் படுத்த நாள்தொட்டு
1455 ஒரு நாள்,
தீனம் என்ற செய்தி யறிந்து
மருமகன் வந்தான், வாயிலில் நின்றான்,
எட்டிப் பார்த்தான், இனிஇவர் என்றும்
எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்;
1460 அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்;
என்ன வேண்டுவது என்றும் கேட்டான்!
பக்கத் திருந்த பாவிகள், யாங்கள்
இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம்;
கண்ட மக்களும் கதறி யழுதனர்;
1465 புருஷனும் இதனைப் பொறுக்கமாட்டாமல்,
அருகில் நின்ற மருமகனை நோக்கி,
"அப்பா! வாடா!, அண்டையில் இருடா,
நாச காலர் நாலைந்து பேர்கள்
கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம்

1470   ஆடும் படியாய் ஆக்கி விட்டனர்.
போகட்டும், போகட்டும், போனது போகட்டும்,
இன்றோ நாளையோ இப்பொழுதோ என்று
எனக்கும் காலம் இறுகி விட்டது.
இதுநாள் வரையில், யான்என் மனைவி