பக்கம் எண் :

304கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1479   கம்பளி சால்வை கரும்படங்கள் வாசக்
கத்தூரி பச்சைக்கற் பூரங்களும்
அம்பொன் மணிமுத்து மாலைகளும் - வகைக்கு
ஆயிர மாயிரம் கொண்டுவந்தார்.
35

1480   பத்து மடிப்பிலே மூடினாலும் - முகம்
பார்வை மறைந்திடாப் பட்டுக்களும்,
சித்தரச் சேலைத் தினுசுகளும் - நல்ல
செம்பொற் சரிகையுந் தாங்கிவந்தார்.
36

1481   வந்தவர் யாவரும் வாழ்த்திநின்றார் - திறை
வைத்தடி போற்றி வணங்கிநின்றார்;
சிந்தைக் கினிய திருமகனுக்கு - அவர்
சித்தார்த்தன் என்னவே நாமமிட்டார்.
37

வேறு

1482   மன்னன் திருமா மகனைக் காணப்
பற்பல நாட்டுளார் பற்பலர் வந்தனர்.
அவரோடு,
மண்நசை விட்டு மறச்செவி அடைத்தோன்,
ஐம்புலன் அடக்கி அறச்செவி திறந்தோன்.
அரச நீழலில் அனுதினந் தங்கி
அருந்தவம் புரிந்த அசிதமா முனிவன்
புத்த ஞாயிறு புவியில் உதித்ததென்று
இமையவர் எடுத்த இசையொலி யதனைத்
தியான வேளையில் தெளிவுறக் கேட்டு,
மனத்தில் அடங்கா மகிழ்வொடு வந்தனன்;
வந்த முனிவனை மன்னவன் அடிபணிந்து,
ஆசனம் உதவி, அர்ச்சனை செய்து,
மாயையை நோக்கி, மதலையை எடுத்துஅவன்
திருவடி வைத்திடச் செப்பினன். அவளும்
கணவ னிட்ட கட்டளை போற்றி
மைந்தனை எடுத்து வருவது கண்டு,
மாமுனி எழுந்து வணங்கி நின்று,
பொறுபொறு, தாயே! பொறு" எனத் தடுத்து,