Untitled Document | 1483 | உலகம் முழுதும் ஒருகுடை யின்கீழ் ஆளும் அண்ணல் அரண்மனை யருகில், மலர்ந்த மலர்கள் மணமிக வீசப் பொறிவண்டு ஆடும் பூம்பொழில் மீது, வடதிசை இமய மாமலை அமர்ந்த வாழிடம் நோக்கி, வளரும் அன்பால் உருகிய உள்ளம் ஒழுகிய தென்னப் பாடியே அன்னப் பறவைகள், வான வீதி வழியே விரைந்து சென்றன. செல்வது கண்டு, தேவ தத்தன் - அரசிளங் குமரற்கு அண்டிய உறவினன் - வில்லினை வளைத்து வெய்யதோர் பாணம் எய்து நின்றனள், எய்து அப்பாணம் முதன்முதல லாக முன்னர்ச் சென்ற அன்னப் பறவையின் அகன்சிறை யதினில் படவே; ரத்தம் பாயப் பறவையும் தளர்ந்து சுருண்டு தரையில் விழுந்தது. விழுந்த அப்பறவை, மேனி முழுதும் ஒழுகி ஓடும் உதிரம் புரளத் துள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு, சிந்தை கனிந்து, திருமா மன்னரின், செல்வக் குமாரன் சித்தார்த் தன்போய், மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும் தண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து, மடியில் வைத்து மார்போடு அணைத்துத் தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினன். அப்பால், இடக்ககையிற் பறவையை ஏந்தி, அம்பினை வலக்கை யதனால் வாங்கி, வடிந்த உதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில் | | |
|
|