| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 315 |
Untitled Document அப்பால் யாதோ? அறிபவர் யாரோ? மன்னர் மகனோ, மனத்தில் சலனம் யாதும் இன்றி இருந்தனன்; அவன் முகம் சாந்தமும் அமைதியும் தண்ணிய அருளும் தவமும் காட்சியே தந்தது; ஆயினும், அவன் கன்னியர்க்கு எட்டாக் கனியே ஆயினன். கூடி நின்றவர் கமரி ஒருத்தியை, "இவள், அழகிற் சிறந்தவள்; ஐயமில்லை, அரசிளங் குமரன் அன்பிற்கு உரியாள் இவளே யன்றிவேறு யாவரும் உளரோ?" என்று புகழுரை இயம்பவே; அதனால் மங்கை அவளும் மனந்தடு மாறி நடுக்க முற்றஓர் நவியே போல அரியா சனத்தின் அருகில் சென்றும் வழங்கும் பரிசினை வாங்கிடாது ஓடிச் சேடிய ரோடு சேர்ந்து நின்றனள். அத்தனை ஜோதி ! அத்தனை மகிமை! அத்தனை தெய்வ அருட்கலை பொலிந்தது அரசிளங் குமரன் அழகிய திருமுகம்! இவ்வாறு அந்நகர் எழிலுறு மங்கையர் ஒருவர்பின் ஒருவராய் உலகாள் மன்னவன் மைந்தனைக் கண்டு வணங்கிச் சென்றனர். இருந்த பரிசுகள் யாவும் மீதி ஒன்றுமே யில்லாது உதவப் பட்டன. அப்பால், அங்கையற் கண்ணி அழகின் செல்வி திங்களைப் பழிக்கும் திருமுக விலாசினி பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி யசோதரை என்னும் யௌவன குமாரி நேரெதி ராக நிமிர்ந்து நோக்கி வருவது கண்ட மன்னர் மகனும் திடுக்கிட்டு உள்ளம் திகைப்புக் கொண்டனன். இதனை, பக்கம் நின்ற பலருங் கண்டனர். | |
|
|