பக்கம் எண் :

320கவிமணியின் கவிதைகள்

Untitled Document
5. சித்தார்த்தன் துறவு

     (பள்ளியறையில் யசோதரை கனாக்கண்டு "காலம்வந்தது" என்று
வாய் புலம்புகிறாள். சித்தார்த்தன் அதைக்  கேட்டுக் கவலையிலிறங்கி,
வானில்        நட்சத்திரங்களைப் பார்க்கிறான். உரிய காலம் வந்தது
என்றறிந்ததும் துறவு பூணத் துணிகிறான்.)

1525   பள்ளி யறையில் பஞ்சணை மீதில்
அங்கையற் கண்ணி யசோதரை அயர்ந்து
கண்வளர் வேளைஓர் கனவு கண்டு,
'வந்தது காலம் வந்தது' எனவே
மயங்கிப் புலம்பினள்; வார்த்தை கேட்டு;
விரைவில் எழுந்து வெளியில் இறங்கி,
மன்னர் குமரன் வானை நோக்கினன்.
சந்திரன் கடகம் தங்கி யிருந்தனன்;
வானில்,
மற்றைக் கோள்களும் மற்றைய நிலைகளில்
ஒத்து நின்று அங்கு உரிய காலம்
உதித்த தென்ன உணர்த்தின; அவைஎலாம்
அருள்வடி வாகிய அண்ணலை நோக்கி,
"இரவும் இதுவே; இரவும் இதுவே;
பெருமை பெறும்வழி பேணுகின் றனையோ?
நன்மை தரும்வழி நாடுகின் றனையோ?
மணிமுடி தாங்கி மன்னர் மன்னனாய்
நீள்நிலம் புரக்க நினைக்கின் றனையோ?
உலகி லுள்ள உயிரெலாம் உய்ய
நாடும் இழந்து நகரும் இழந்து
வீடும் குடியும் விட்டவ னாகி
தன்னந் தனியே தரணியின் மீதுஓர்
ஆண்டி யாக அலைந்து திரிய
எண்ணுகின் றனையோ? யாதுஉன் விருப்பம்?
தெளிந்துநீ உள்ளம் தேறு வாய்" எனக்
கூறின; அவனும் குறிப்பின் உணர்ந்தனன்.
எங்கும் மூடி இருண்ட இருளில்