பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு331


Untitled Document
7. கருணைக் கடல்
      (அச வாழ்வைத் துறந்து    நள்ளிரவில் வெளிப்பட்டு சென்ற புத்தர்,
பிம்பிசார மன்னனுடைய யாகத்துக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டு
மந்தையின் மத்தியில், துன்புற்றிருந்த ஒரு நொண்டி ஆட்டுக்குட்டியைத்
தம் தோளில் சுமந்து கொண்டு      சென்று, யாகசாலையை அடைந்து,
மன்னனுக்கு அறவுரை போதித்து,     நாடெங்கும் உயிர்க் கொலையை
நிறுத்திய வரலாறு இதனுள் கூறப்படுகிறது.)
1545 மந்தை பெரியமந்தை - உணவின்றி
     வாடி மெலியும் மந்தை,
சிந்தை தளரும் மந்தை நடக்கவும்
     சீவ னிலாத மந்தை.
101
1546 கண்ணிலே கண்டபுல்லை - நின்றொருவாய்
     கௌவிட வொட்டாரையோ!
தண்ணீர் குடிப்பதற்கும் - விலகிடச்
     சம்மதி யாரேஐயோ!
102
1547 காடு மலைகளெல்லாம் - ஓடியோடிக்
     கால்களும் ஓய்ந்தனவோ!
ஆடுக ளாயிடினும் - எவரிவ்
     அநியாயம் செய்வரையோ!
103
1548 தன்னந் தனியாகி - ஒருமறி
     தாவிமுன் ஓடுவதையோ!
பின்ஓர் இளமறியும் - கிந்தியிங்கு
     பீடைப் படுதேஐயோ!
104
1549 கல்நெறி கொண்டதுவோ? - விழுந்தொரு
     கால்முட மானதுவோ?
செல்லும் வழிநீள - உதிரமும்
     சிந்திப் பெருகுதையோ!
105
1550 ஓடும் மறிதேடித் - தாயுமுன்னில்
ஓரடி வைத்தவுடன்,
வாடும் மறியை எண்ணி - விரைந்துபின்
வந்து தயங்குதையோ!
106