Untitled Document
| 1663 | | என்றுரைத்த மொழிகேட்டு, அவ்வேழை மார்பில் ஏந்தியணைத் திடுமகனோடு ஊரில் எங்கும் சென்றுகடு கிரந்துவெறுங் கைய ளாகித் திரும்பிமுனி திருவடியைச் சிரமேற்கொண்டு | 220 |
| 1664 | | “புவியெலாம் நிறைந்த புகழோய்! புலவர் கவியெலாம் நிறைந்த கருணையங் கடலே, ஊரெலாம் அலைந்தேன், ஒவ்வொரு மனையும் ஏறி யிறங்கினேன், எனக்குறை உரைத்தேன். ஏழை ஒருமகள் - ஏழை யலாதுஎவர் ஏழைக் கிரங்குவர் - என்கதை கேட்டு மார்போ டணைத்த மதலைக் கண்டு, மாறாக் கண்ணீர் வடிவதை நோக்கி, ஆறாத் துயரம் அடைந்தனள் இவளெனப் பரிவு கொண்டு என்பக்கம் நின்று நாவிக் கொழித்த நாவுரிக் கடுமைகயும் அளந்துஎன் மடியில் அளித்திட வந்தனன் பிள்ளை யென்றிடில் பேயும் இரங்குமே! பெண்டிர் இரங்குதல் பேசவும் வேண்டுமோ ? யானும், இட்ட கடுகை ஏற்பதன் முன்னம், ‘தாயரே, நீவிர் தங்கும் மனையிது சாவறி யாத தனிமனை தானா? தந்தை தாயர் தமக்கை தங்கை மைந்தர் எவரும் மரித்ததும் உண்டோ? உரைத்திடும்’ என்றேன், உரைகேட்டு அவளும், ‘வினவியது என்னை - விரிநீர் உலகில் பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே அம்மா! காலையில் உதித்த கடுங்கதிர்ச் செல்வன் மாலையில் தளர்ந்து மறைவது மிலையோ? இம்மா நிலத்தில் இயற்கையின் குறிப்பெலாம் அம்மா நீயும் ஆய்ந்திலை போலும்! | | |
|
|