Untitled Document
| 224 | | மங்கையர்க்கும் ஆடவர்க்கும் மணமுடிப்போமே! - மன்னர் தங்கமுடிமீதும் நாங்கள் தங்கி வாழ்வோமே! | | 225 | | கரும்பினிலும் இனியரசம் கருதி வைப்போமே! - அதை விரும்பிவரும் நண்பருக்கு விருந்தளிப் போமே! | | 226 | | ஈசனருள் வேண்டிநிதம் இணையடி போற்றி - நல்ல வாசமெழு தூபதீபம் வழங்கி நிற்போமே |
| | வேறு | | 227 | | மண்ணிலிரந்து பொருள் வரினும் - அதை மாற்றி மணம்பெறச் செய்திடுவோம்; கண்ணுக் கினிய நிறங்களெல்லாம் - விண்ணிற் காணுங் கதிரிடம் பெற்றிடுவோம். |
| 228 | | வண்டின் வரவெதிர் பார்த்துநிற்போம் - நல்ல வாசனை வீதியில் வீசிநிற்போம் உண்டு களிக்க மது அளிப்போம் - சற்றே உட்காரப் பீடமும் இட்டுவைப்போம். |
| 229 | | மங்கைய ரோடு குமரரையும் - மனம் வாய்த்த மணஞ்செய்து வாழவைப்போம் தங்கமும் பொன்னும் மணிகளுமே - எம்மை தாழ்ந்து வணங்கமேல் தங்கிடுவோம். |
| 230 | | ஈசன் அடியில் பணிந்திருப்போம் - அவர் ஏந்து முடிமீதும் ஏறிநிற்போம்; பூசனை செய்யும் அடியவரின் - உள்ளம் பொங்கு களிப்பெலாம் காட்டி - நிற்போம். |
| 231 | | மன்னருங் கண்டெதிர் வந்திடுவர் - கட்டி மார்போ டணைத்து மகிழ்ந்திடுவர். இந்நிலத் தின்பம் பெருகிடவே - நாங்கள் என்றும் உயிர்வாழ்ந் திருப்போமம்மா! | |
|
|