பக்கம் எண் :

394கவிமணியின் கவிதைகள்

Untitled Document
தீதறு திருப்பதிகள் - புண்ணிய
     தீர்த்தங்கள் யாவுமே யுன்
பாத பங்கஜ மெனவே - நம்பிப்
     பக்தியொடனு தினமும்
(திருவடி)
7. கதிரைக் காண்பதெப்போ?
இராகம் - நாதநாமக்ரிய    தாளம் - திச்ர ஏகம
பல்லவி
1791 களை பறிப்ப தெப்போ? - கண்ணில்
     கதிரைக் காண்ப தெப்போ?
அநுபல்லவி
விளைநில முழுதும் - அடர்ந்து
     மீறிமே லோங்கும்
(களைப்பறிப்)
சரணம்
   உள்ள உரத்தையெல்லாம் - ஊரை
     உறிஞ்சு கின்றதையோ!
கொள்ள உணவின்றிப் - பயிரும்
     குறுகிப் போகுதையோ!
(களைப்பறிப்)
   குறுகும் பயிரினைக் - காணில்
    கும்பி எரியுதையோ! அறு கணிந்தவனே! - சிவனே! ஆதி பராபரனே!
(களைப்பறிப்)
8. மோகினி
இராகம் - ஆனந்த பைரவி     தாளம் - ஆதி
பல்லவி
1792 புத்தி தடுமாறுதே யடா! - இவளொரு
     பூலோக ரம்பையே யடா
அநுபல்லவி
சித்திரத்தில் கண்டதில்லை
     சிற்பச் சிலையிலில்லை,
புத்தகத்தும் இவ்வழகைப்
     புலவர் புனைந்ததில்லை
(புத்தி)