பக்கம் எண் :

396கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அநுபல்லவி
  பக்தர் பணியும் ஸ்ரீ
     பத்ம நாப னருளால்
எத்திசையும் போற்ற
     இந்திரனைப் போல
(நித்தமும்)
சரணம்
ஞாலம் புகழ வஞ்சியில் .- பொறுப்பாட்சி
     நாட்டில் நலம் கண்டவன்,
ஆலய வாசலை
     அனைவர்க்கும் திறந்தவன்
மூலமன் சூடிய
     முடி சூடப் பிறந்தவன்,
சீலம் சிறந்தவன்
     சித்திரை மன்னவன்
(நித்தமும்)
11. நல்ல உபதேசம்
இராகம் - செஞ்சுருட்டி     தாளம் - ஆதி
பல்லவி
1795 நல்லது சொல்லுகின்றேன் மனமே! - இதையெந்
     நாளம் நீ நம்புவா யென் மனமே!
கண்ணிகள்
தில்லைப் பதிக்குச் செல்லுவேணும் - சென்று
     சிற்றம்பலம் சுற்ற வேணும்;
அல்லும் பகலும் அதில் ஆடும் - ஈசன்
     ஆனந்த நடம் காணவேணும்
(நல்லது)
பைந்தமிழ்ச் சோலையிலே புகுந்து - நல்ல
     பரிமளம் வீசும் மலர் பறித்துச்
சந்தமெழ மாலை கட்டி - அவன்
     தாளில் அணிந்து தொழுவேணும்
(நல்லது)
கன்றுக் கிரங்கும் பசுப்போல - அவன்
     கனிந்தருள் செய்திடுவான் மனமே!
என்றும் அவன் ஆணையுண்டானால் - நமக்
     கேதும் கவலையில்லை மனமே!
(நல்லது)