Untitled Document | | | மிக்கோ ரென, சித்தி எட்டையும் பெற்றபின் மேலான வீடும்அடைவார்; மேதினியில் இவ்வுண்மை அறியாத மாந்தரே வேறுதெய் வங்கள் பணிவார்; பொக்கான எள்ளினை மிக்கவே ஆட்டினும் பூசுதற் கெண்ணெய் தருமோ? பொய்யான தெய்வங்கள் ஒருகோடி போற்றினும் புண்ணியம் சிறிதும் உளதோ? திக்கா றிரண்டோடு மிக்காறு பாய்கின்ற செய்யகஞ் சூழும் ஊராம் தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே! தேவியழ கம்மை உமையே! |
| 8. | | சந்ததிக் கேயென்ன என்னைப் பயந்திட்ட தந்தைதாய் செய்த தவமோ? தலைநாளில் யான்செய்த புண்யமோ? அல்லதுன் தண்ணருட் பெற்றி தானோ? சிந்தையுன் பெயரினொடு நாவுனது சீரையும் திரமென்று கொண்டு, நித்தம் சீமாட்டி யென்றுனது கால்மாட்டி லேவந்து சென்னியும் பணிய நின்றேன்; எந்தநாள் உள்ளமும் இரங்கிநீ ஆள்வையோ? எந்தவிதத் துய்கு வேனோ? இவ்வுடலை இன்னமும் எடுத்தெடுத் துழல் வெனோ? யாதொன்றும் அறிகி லேனே; செந்தமிழ் மணத்தினொடு செல்வர்மண முங்கொடைச் செங்கைக்கு மணமும் மாறாத் தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே தேவியழ கம்மை உமையே! |
| 9. | | ஆங்காரி ஆனந்தி அம்பிகை நிரந்தரி அந்தரி ஆளி யூர்தி ஆரணி சர்வபரி பூரணி நாரணி அயிராணி புயக வேணி | |
|
|