பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு401

Untitled Document
17, அறிகிலேன்
இராகம் - பூர்வி கல்யாணி     தாளம் - ஆதி
பல்லவி
1801 என்ன செய்வே னையா! - இனி நான்
    எப்படி உய்வே னையா!

அநுபல்லவி
உன்னரு ளன்றி
    ஒரு துணை வேறில்லை,
என்னப்ப னே! விடை
    ஏறும் பெருமானே! 
(என்ன)
சரணம்
அன்ன விசாரம்
    அதுவே விசாரமாய்,
மன்னும் உலகிலென்
    வாணாளைப் போக்கினேன்; 
இன்னும் பல பிறப்
    பெய்தி வருந்தாமல்,
பொன்னம் பலத்துன்னைப்
    போற்றி அறிகிலேன்
(என்ன)
18. தயங்கேன்
இராகம் - தன்யாஸி தாளம் - ஆதி பல்லவி
1802 எத்தனை ஜன்மம் எடுக்கவும் ஏழைநான்
     ஏதும் தயங்கே னையா! - ஐயா!
ஏதும் தயங்கே னையா! 

அநுபல்லவி
  பக்தியோ டுன்பாதம்
     பாடிப் பணிந்திடும்
பாக்கியம் வாய்க்கு
     மெனில் - இன்னும்
(எத்)