பக்கம் எண் :

404கவிமணியின் கவிதைகள்

Untitled Document
கார்த்திகேயா! சரணம்
     காத்தருள் என்னையென்று
கீர்த்தி பெருகும் அவன்
     கிருபையை வேண்டிநிதம்
(வந்தனை)
21. மலையாதே
இராகம் - நாதநாமக்ரிய     தாளம் - ஆதி
பல்லவி
1805 மலையா திருப்பாயென் மனமே! - சற்றும்
     மலையா திருப்பாயென் மனமே!
அநுபல்லவி
அலையாழி புரளாமல்
     அண்டங்கள் சிதறாமல்
நிலையாய் நிறுத்தும் ஈசன்
     நினைக் கை விடுவானோ?
(மலையா)
சரணம்
தடுத்தாளும் பெருமானைச்
     சங்கரனைப் புலித்தோல்
உடுத்தாளும் திருத்தில்லை
     உமையொரு பாகனை நீ
அடுத்தாள வேண்டி நிதம்
     அடிபணிந் திடில் அவன்
எடுத்தாளத் திருவுள்ளும்
     இரங்கிட மாட்டானோ?
(மலையா)
22. ஆதிரை அண்ணல்
இராகம் - மத்யமாவதி             தாளம் - ஆதி
பல்லவி
1806 திருநாமம் பாடி வாழ்த்துவோம்! - தினம்தினம்
     திருநாமம் பாடி வாழ்த்துவோம்!
அநுபல்லவி
ஒருநாமம் ஓருருவம்
     ஒன்றுமில்லாற் காயிரம் (திரு)