பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு407

Untitled Document
25. அருள் செய்யமா
இராகம் - பியாகடை     தாளம் - ஆதி
பல்லவி
1809 இன்னிசைக் கவியமுதம் - இரங்கிநீ
     எனக்கருள் செய்வாயம்மா
(இன்னிசை)
அநுபல்லவி
அன்னையே அழகியே
     அகில கலாநிதியே
உன்னும் அடியவரின்
     உள்ளத் தொளிர் மதியே
(இன்னிசை)
சரணம்
சாத்திரம் கற்றறியேன்
     தவமேதும் செய்தறியேன்
தோத்திரம் பாடியுன்னைத்
     தொழுதுய்ய வேண்டிநின்றேன்
வாய்த்த செங் கோல்பிடித்து
     மகுடம் புனைந்துலகு
சாத்தர சாளும் சிவ
     காமி மீனாட்சியே.

26. குடியரசு வாழ்த்து

பல்லவி

1810 நித்தமும் வாழ்கவே - பாரத நாட்டில்
     நித்தமும் வாழ்கவே
 

அநுபல்லவி

  கத்தியும் வாளுமின்றிக்
     கருவிவே றேது மின்றிச்
சத்தியப் போர் நடத்திக்
     சமைத்த குடியரசு
(நித்தமும்)