பக்கம் எண் :

414கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  சுந்தரன் வேண்டிடத்
     தூது நடக்கின்றாரோ?
எந்தச் திசையேகி
     என்ன செய்கின்றாரோ?
(இன்னம்)

33. தேடித் தவிக்குதடி!

இராகம் - வகுளாபரணம்     தாளம் - ஆதி

பல்லவி

1817 தேடித் தவிக்குதடி! - என்உள்ளம்
     தேடித் தவிக்குதடி!
 

அநுபல்லவி

  பாடி மகிழ்ந்திடப்
     பக்கத் தமர்ந்திடக்
கூடி அளாவிக்
     குலாவி நித்தமும்
(தேடித்)

சரணம்

  அல்லாரும் கண்டர், பொன் -
     அம்பலக் கூத்தர், கை
வில்லாக வேமேரு
     வெற்பை எடுத்தவர்,
கல்லானை உண்ணக்
     கரும்பைக் கொடுத்தவர்,
எல்லாம் வல்லசித்தர்,
     என்மது ரேசரைத்
(தேடித்)

  கல்லைப் பிசைந்து
     கனியாக்க : வல்லவர்,
புல்லையும் நெல்லெனப்
     போற்றிடும் நல்லவர்,
சொல்லைக் கடந்தவர்,
     சொற்பொரு ளானவர்,