பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு417

Untitled Document
அநுபல்லவி
செந்தமிழ்த் தெய்வத்
     திருப்புகழ் ஓதியே
சிந்தை மகிழ்ந்துநம்
     சேவற் கொடியோனை
(வந்தனை)
சரணம்
பயிலும் தென்றல் பரிமளித்திட
     பயன்மரம்பல பழமுதிர்த்திட
மயில்கள் ஆடக் குயில்கள்பாட
     வளரும் சோலை வடகுமரையில்
அயில்கை ஏந்தி அமரும் அழகா!
     அடியர்க் கிரங்கி அருளும் குழகா!
ஜய ஜய ஜய சரவண பவா!
     சரணம் சரணம் சரணமென்று
(வந்தனை)
37. அரங்கன்
   
இராகம் - ஸஹானா     தாளம் - ஆதி
பல்லவி
1821 இரங்கா திருக்க லாமோ! - திருவுள்ளம்
     இரங்கா திருக்க லாமோ?
அநுபல்லவி
அரங்கா! முகுந்தா! என்
     ஐயா! கோவிந்தா! நீ!
(இரங்)
சரணம்
செல்லும் வழியறியேன்
     சேரும் இடமறியேன்;
நல்ல துணையுமில்லை
     நடக்க வலியுமில்லை;
கல்லும் முள்ளுமடர்ந்த
     காட்டி லகப்பட்டுநான்
அல்லும் பகலுமுன்றன்
     அருளையே நோக்கிநின்றேன்
(இரங்)