பக்கம் எண் :

442கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்

  சத்தியம் காக்கும் கொடி - சுதந்திர
      சக்தி யுண்டாக்கும் கொடி,
சித்தந் தெளிந்திடவே - ஊழியங்கள்
      செய்திடத் தூண்டும் கொடி,
      உத்தம வீரரும்
      பத்தினிப் பெண்டிரும்
      தத்தம் உயிரென
      நித்தமும் போற்றிடும்
(கொடி)

  தீதெலாம் ஓட்டும் கொடி - பாரத
     தேவி பாராட்டும் கொடி,
ஓதிய ராட்டினமே - கதியெனும்
     உண்மை உணர்த்தும் கொடி,
     சாதிமத பேதம்
     ஏதுமிலா நடு
     நீதியை நாட்டில்எவ்
     வீதியும் நாட்டிடும்
(கொடி)

  பட்டினி போக்கும் கொடி - நமக்குநற்
     பாக்கியம் சேர்க்கும்கொடி,
இட்டமாய் யாவருமே - இணங்கி
     இருந்திடச் செய்யும் கொடி
     ஒட்டுக் குடிசையில்
     ஓங்கிய மேடையில்
     எட்டுத் திசையினில்
     எங்கும் எழுந்திடும்
(கொடி)