| 566 | காளம் - எக்காளம் |
| கருங்கொம்பு - ஓங்காரமாக ஒலிக்கும் ஒருவகை இசைக்கருவி |
| 567 | களியல் - கோலால் அடித்து ஆடப்படும் நாட்டார்நிகழ்த்துகலை. வயதானவர்களின் இறப்புச் சடங்கு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட கலை. பிண ஊர்வலத்தின் முன்னே களியலாட்டக்கார்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்வர். |
| அசை கம்புகள் - பிணத்தின் முன் நீண்ட கழிகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடிக்கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்குரிய கழைகள். இக்கழைகள் அசை கம்பு எனப்படும். |
| 568 | முரசு - நையாண்டி மேளத்துக்குரிய முரசு என்னும் தோலிசைக் கருவி. |
| 572 | பத்துச் சாக்கு - பத்துமூட்டை |
| 573 | அடுத்த கிழமை - ஒருவர் இறந்த தினத்தை அடுத்து வரும் ஞாயிறு அல்லது வியாழக்கிழமை |
| 576 | விளம்பவில்லையா - வினியோகிக்கவில்லையா |
| 576 | பதினாறு-இறந்து போனவர்க்குக்கருமாதிச்சடங்கு நடத்தும்நாள். இது பெரும்பாலும் இறந்ததினத்திலிருந்து தொடரும் 16 ஆவது ஞாயிறு அல்லது வியாழக்கிழமை அன்று நடத்தப்படும். |
| 579 | கடுக்கன் - ஆண்கள் காதில் அணியும் சிறிய காதணி |
| 580 | பஞ்ச பாத்திரம் - பூசையின் போது அர்ச்சியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நாநீயம், சுத்தோதகம்என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் பாத்திரம் |
| 581 | அமுது படி-வேளாளரின் பதினாறாம்நாள் சடங்கில்பிராமணன் எடுத்துச் சென்று சமைத்துண்ணத் தரப்படும் அரசி அல்லதுஅதற்கீடாகத் தரப்படும் பணத்தொகை |
| 582 | பசுவும் கன்றும் பிராமணனுக்குத் தானமாக வழங்கப்பட்டது. |
| பத்துமரக்கால் நிலம் - ஏறத்தாழ 50 செண்டு அளவுள்ள வயல் |
| 587 | படிப்புரை - ஓட்டுத்திண்ணை |
| படிக்கம் - வெற்றிலைச் சாற்றை உமிழ்வதற்குரிய வாயகன்ற பாத்திரம் |
| 588 | பத்திரகாளிபலி பீடம் - பத்திரகாளி என்னும் நாட்டார் தெய்வத்தின பலிபீடம் எப்போதும் ரத்தம் பட்டு சிவப்பாக இருக்கும்.அதுபோல் படிக்கம் பாத்திரத்திலும் வெற்றிலைச்சாறு சிவப்பு நிறத்தில் நிரம்பியிருக்கும். |