பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு57

Untitled Document
372 நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக் குட்டி.
373 முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி.


56. பொம்மைக் கலியாணம்
374 பொம்மைக்கும் பொம்மைக்கும் கலியாணம்
பூலோகமெல்லாம் கொண்டாட்டம்;
பாவைக்கும் பாவைக்கும் கலியாணம்,
பகலும் இரவும் வேலையாம்.
375 கொட்டகை போடுது சிலந்தி;
குறடு கட்டுது கறையான்;
கோலம் போடுது நண்டு.
376 கண்ணுக்குமை, காக்கை கூட்டுது;
கழுத்துக்காரம், தத்தை கட்டுது;
கொண்டைக்குப்பூ, கோழி வளர்க்குது.
377 குயில்கள் இனிய குரலிற் பாடும்;
மயில்கள் நல்ல நடனம் ஆடும்.
378 வண்டினம் எல்லாம் வந்துகூடி
வாய்க்கினிய அமுதம் வைக்கும்.
379 ஊராரே? நீர் வாரீரோ?
வந்து மணமும் காணீரோ?
கண்டு வாழ்ந்திடப் போகீரோ?

  57. எலிக் கலியாணம்
380   எலிக்கும் எலிக்கும் கலியாணம்;
இரவிலே சுப முகூர்த்தமாம்.

381 வீட்டெலி வந்தது, காட்டெலி வந்தது,
வெள்ளெலி வந்தது, முள்ளெலி வந்தது,
குண்டெலி வந்தது, சுண்டெலி வந்தது.

382   எங்கெங்கு முள்ள எல்லா எலிகளும்
கூட்டமாய்க்கூடி குதிலுள் நுழைந்தபின்,
நல்ல விருந்தேழு நாளாய் நடந்தது.