பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு9

Untitled Document
வேறு
21. சின்னஞ்சிறிய மலர்,இந்தச்
    சிறிய மலரைக் கொய்திடுவாய்
இன்னுங் காலஞ்செல்லின்,ஒளி
    இழந்து வாடி விழுந்திடுமே

22. ஐயனே!நீ அணிமாலைக்கு
    ஆகா மலரேயானாலும்
செய்ய உன்றன் திருக்கரத்தால்
    தீண்டும் பெருமை அளிப்பாயே

23. நேரம் இருண்டு போய்விடுமோ?
    நியமப்பூசை தவறிடுமோ?
ஒரும்உள்ளம் அயர்கின்றேன்
    உண்மை அறியா துழல்கின்றேன்

24. மணமும் நிறமும் இல்லாவோர்
    மலரே எனினும்,ஐயா நின்
பணியிற் சேரத் தாழாது
    பறித்துக் கொள்ள வேண்டினனே

4. செந்தில் குமரன்

25. உன்னிடத்தில்லன்றி,உலகில் எவரிடம்போய்,
என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன்-பன்னிருகை
ஏந்துமெழில் செந்தில் இறைவா!உனையன்றி
ஆந்துணை வேறுண்டோ ஐயா?

26. தண்டனை போதுமைய! தாங்கமுடியாதையா!
கொண்டபிணி நீங்கவருள் கூரையா!-கண்டுனது
வாசலில் வந்து,வணங்கவலி இல்லைஐயா!
ஈசனே!செந்திலிறைவா!

27. பண்டிதரும் கைவிட்டார்;பத்தியமும் தீர்ந்தது;யான்
உண்டமருந் தால்குணமோ ஒன்றுமில்லை-அண்டர்
அமராவதிகாத்த அண்ணலே!செந்தில்
குமரா!எனையாண்டு கொள்