பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு93

Untitled Document
586 இந்தக் கருவியெல்லாஞ் சேர - நீதான்
     எவ்வா றமைந்தனை? என் குழந்தாய்!
எந்தை இறைவன்உளங் கொண்டான்; உடன்
     யானும் எழுந்துநின்றேன், அம்மா!

587 மனமிக மகிழ்ந்திடக் குழந்தாய்! - நீயென்
     மடியினில் வந்தவகை எதுவோ?
தினமும்நீ செய்தபெருந் தவத்தால் - அந்தத்
     திருவருள் கூட்டிவைத்த தம்மா!

77. முதல் துயரம்
588 முல்லை பூத்த தம்மா! - இருவாட்சி
     மொட்ட விழ்ந்த தம்மா!
மல்லி கைப்பூவும் - மலர்ந்தநல்
     வாசம் வீசு தம்மா!

589 தும்பி பாடுதம்மா! - கிளிபயில
     சோலை தேடு தம்மா!
தம்பி எங்கே? அம்மா! - விளையாடத்
     தனியே நின்றேன், அம்மா!

590 படரும் முந்திரியில் - கனிமிகப்
     பழுத் துதிரு தம்மா!
தொடரும் வேனிலும் - நமக்கிங்கே
     தொடங்கி விட்ட தம்மா!

591 சின்னஞ் சிறுபிஞ்சு - வெள்ளரியில்
     செழித் திருக்கு தம்மா!
கன்னிக் காய்பறிக்கத் - தம்பியையும்
     காணோமே, அம்மா!

592 அம்பொன் மாலைகள் - செடிபல
     அணிந்து நின்ற, அம்மா!
தம்பி இல்லாமல் - அழகவை
     தருவ தில்லை, அம்மா!

593 புனைந்த சித்தரம்போல் - வண்ணத்திப்
     பூச்சி சுற்று தம்மா!
துணைவன் இல்லாமல் - யானும் அதைத்
     தொடர்ந்து செல்லேன், அம்மா!