கிழக்கிலிருந்து அரசியல் மேதை ஒருவன் வரப்போகிறான் என்கிறார்கள்; அவன் எந்தத் திசையிலிருந்து வந்தால் தான் எனக்கென்ன?
மேற்கிலிருந்து விஞ்ஞானி ஒருவன் வரப்போகிறானாம் நாகரிகவேட்பாளர்கள் அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருக்கட்டும் எனக்கென்ன?
வடக்கிலிருந்து ஞானி ஒருவன் வரப்போகிறானாம்; அவன் உபதேசங்களுக்காகக் காதைத் திறந்து வைத்திருப்போர் அந்தத் திசையை நோக்கிக் கண்ணையும் திறந்து வைத்திருக்கட்டும்.
எனக்குத் தெரிந்திருக்கும் திசையெல்லாம்-- தேவையுள்ள திசையெல்லாம் ஒரே ஒரு திசைதான்...
என் தென்றலே, நீ வரும் திசைதான்.
15 |
|
|
|