நீ தொடங்குகிறாய்;
“ஊருக்குப் போகிறேன்; உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா?”
“ஆமாம் இரண்டு நாட்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும்”
“அப்படியானால் அதற்குப்பின் சங்கடமாயிருக்காதோ? சரியாய்ப் போய்விடுமோ,” -நீ ஊடிப் பிணங்குகிறாய்.
“அதற்குப் பின்தான் நீயே வந்து விடுவாயே.. இரண்டு நாட்களுக்கு மேல் என்னைப் பிரிந்து உன்னால் இருக்க முடியாதே” -நான் உன் ஊடலை அணைக்கிறேன்.
உன் முகம் பௌர்ணமிப் புன்னகை சிந்துகிறது.
60 |
|
|
|