பக்கம் எண் :

மீரா.69

93

தாமரைத் தடாகம் ;
ஒற்றைக் காலில் நிற்கும்
வெள்ளைக்கார
விருந்தினனர்க்குப்
பசியோ அபாரம். . . .
இலைகள் விரித்திருந்தும்
பரிமாறவில்லை
உணவை யாரும் !

94

இது என்ன நியாயம்
இருக்கிறேனோ இல்லையோ
உன் நினைவின் ஓரத்தில்,
என் நெஞ்சம் முழுதும் அழுந்தும்
உன் அழகின் பாரத்தில்.