தமிழ்க் காற்றில் மீரா தீட்டிய புதுவர்ணம் குக்கூ
மதிப்புரை கவிஞர் பாலா
சாகாத வானம்நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல்நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம்நாம்; இமயம்நாம்; காலத் தீயில் வேகாத - பொசுங்காத - தத்து வம்நாம்; வெங்கதிர் நாம்; திங்கள்நாம் ; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரிநாம்; கங்கை யும்நாம்! என்ற எழுச்சி முழக்கம் கவிஞர் மீராவின் முதல் முகவரிச்சீட்டு. மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்த கவிதை மனச் சான்றோர்களின் நெஞ்சில் நிலைத்துக் கேட்போர் மனதில் தைத்த கவிதை அது. தமிழ்க் கவிதைக்கு நிகழ்கால வரலாற்றுப் பெருமையினை வரைந்து தந்த மீராவின் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் ஒரு முகவரிச்சீட்டுதாம்; கவிஞர் தம் முகவரி மட்டுமல்ல, தமிழ்க் கவிதையின் முகவரியும் கூட. 1965 ல் வெளிவந்த “இராசேந்திரன் கவிதைகள்” புதுப்பார்வை கொண்ட ஒரு மரபுக் கவிஞரைச் சிம்மாசனம் ஏற்றியது. பாரதிதாசனின் அணி வரிசையில் இருந்து |