பக்கம் எண் :

86

‘சிறப்’புரை

என் கோவை வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சி என்  மணிவிழா. என்
அறுபதாம்   வயது   பிறக்கும் நாள் அன்று   தான்  என்று  எனக்கே
தெரியாமல் நடந்த விழா.

அது எந்த மண்டபத்திலும்   நடக்கவில்லை. உற்றார், உறவினர், என்
நேயர்கள் என்று யாரும்   வரவில்லை. எளிமையாய்   அதே நேரத்தில்
அதிசயமாய் ஒரு வீட்டில் நடந்தது.

கோவைப் புதூரில் உள்ள  வீடு அது. விஜயா பதிப்பக உரிமையாளர்
அருமைச்      சகோதரர்      திரு.மு.வேலாயுதம்,     அதிகாலையில்
இராமநாதபுரத்தில் என் வீட்டுக்குக் காரை அனுப்பி   என்னையும்  என்
மனைவியையும் கூட்டி வரச் சொன்னார். குளித்து முடித்துப் போனாம்.

பட்டு வேட்டி, பட்டுச்  சேலை, சட்டைகளைக் கையில் எடுத்து வந்து
‘இவற்றை  அணிந்து   கொள்ளுங்கள்’   என்றார்.   என்ன   விஷயம்;
என்றேன். இன்று   உங்கள்   மணிவிழாப்  பிறந்த நாள் என்றார். நான்
மலைத்துப் போனேன். மனம் நெகிழ்ந்து போய்விட்டேன்.

புத்தாடைகளை  அணிந்து  கொண்டோம். மாலையை எடுத்து வந்து
அவரும் ஆச்சியும் சூட்டினார்கள். பொன்னாடை போர்த்தினார்கள். கண்
குளிரப்   பார்த்தார்கள். மனங்   குளிரப் போற்றினார்கள். வயிறு குளிர
விருந்துண்ண வைத்தார்கள்.

கொஞ்ச   நேரத்தில்  ‘காரில் ஏறுங்கள்’ என்றார். எங்கே என்றேன்.
நாங்கள் நால்வரும் காரில் ஏறியதும் ‘ஓட்டுநரைப் பேரூர் போ’ என்றார்.
பேரூரில் இறங்கி அவர் பின்னால்  நடந்தோம்.   நேரே  கோயிலுக்குப்
போனார். நாங்கள் பின்னால் போனோம். ‘ஒன்றும் பேசாமல்   உள்ளே
வாருங்கள்’ என்றார். சந்நிதிக்குப் போய்