சீரு டையை அணிந்து கொண்டு
செல்வர் என்றும் ஏழை என்றும்
வேறு பாடே ஏதும்
இன்றி
விருப்ப மோடு படித்து வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இலவ சமாய்க்
கல்வி உண்டு
இருந்து படிக்க வசதி உண்டு
கலக்க
மின்றிக் கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
பென்சில், நோட்டு, தேவை
யான
புத்த கங்கள் போன்ற வற்றை
அன்ப ளிப்பாய்ப் பெற்று
நானும்
ஆர்வத் தோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இன்னும் நிறையக் கல்வி கற்று
இனிய முறையில் தொழிலும் கற்று
நன்மை செய்வேன், நமது நாடு
நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம்-இது
இந்தக் காலம். |