பக்கம் எண் :

பத்துப் பைசா பலூன்
 

                 பத்துப் பைசா விலையிலே
                   
பலூன் ஒன்று வாங்கினேன்.
                 பலூன் ஒன்று வாங்கினேன்.
                   
பையப் பைய ஊதினேன்.

                 பையப் பைய ஊதவே
                   
பந்து போல ஆனது.
                 பந்து போல ஆனபின்
                  
 பலமாய் நானும் ஊதினேன்.

                 பலமாய் ஊத ஊதவே
                   
பானை போல ஆனது.
                 பானை போல ஆனதைக்
                 
  காண ஓடி வாருங்கள் !
             
                      விரைவில் வந்தால்

                               பார்க்கலாம்.   
                      அல்லது, 
 
                      
வெடிக்கும்  சத்தம்
                             கேட்கலாம் !

 
23