நெட்டை யான காலுடனே
நீள மான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில்கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்அது
என்ன தெரியுமா ? -தம்பி
என்ன தெரியுமா ?
முறத்தைப் போன்ற காதுடனே
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வ லத்தில் வருமேஅது
என்ன தெரியுமா ? தம்பி
என்ன தெரியுமா ? |