பக்கம் எண் :

122நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தீமையை எதிர்க்கும்ஒரு
       தீரனுளன் என்றும்
வாய்மையை வளர்க்குமொரு
       வள்ளலிவன் என்றும்
தூய்மைதவ றாத முறை
       சொல்வளவன் என்றும்
சீமைதொறும் வாழ்த்துஜவ
       ஹர்அரிய சீலன்.       3

சொந்தமுள தன்னுடைய
       சொத்துசுக மெல்லாம்
வந்தநில மக்கள்சுக
       வாழ்வுபெற வென்றே
தந்தைதர மைந்த னிவன்
       தானமெனத் தந்தான்
எந்தமொழி எந்தக்கதை
       ஈடுசொல உண்டு?       4

தன்னல மறுப்பினுயிர்
       தன்மையிது வென்ன
இன்னல்களை இன்பமென
       ஏற்க ஒளிமின்னும்
பொன்னில்மணி வைக்க உயிர்
       பெற்றசிலை போலும்
என்னசொலிப் போற்றிடுவோம்.
       எம்ஜவஹர் லாலை!       5

ஏழையின் மனக்குறைகள்
       இன்னவெனக் காட்டிக்
கோழைகளைக் கண்டுகொதி
       கொண்டதுயர் கூட்டி
ஊழ்வினையை வெல்லுமொரு
       ஓவியமும் ஆகும்.