பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 253

துன்பங்கள் வந்திட் டாலும்
       துணுக்குற மாட்டான்; மற்றும்
இன்பங்கள் எய்தி னாலும்
       இச்சித்து மயங்க மாட்டான்;
பின்பவன் ஆசை, அச்சம்
       பிணைந்துள்ள சினமும் நீங்கும்;
தென்புள்ள முனிவ னாகித்
       திடமுற்ற அறிஞன் ஆவான்.       3

நல்லது வந்த போதும்
       நசைதரும் மகிழ்ச்சி கொள்வான்;
அல்லது கெடுதி வந்தால்
       அருவருப் படைய மாட்டான்;
தொல்லைய விருப்பி னோடு
       வெறுப்பையும் துறந்தோன் என்னும்
வல்லவன் அவனே யாகும்
       வலிவுள்ள அறிவு வந்தோன்.       4

தலைஒன்று, கால்கள் நான்கு,
       ஐந்தையும் தனக்குள் ளேயே
நிலைபெற இழுத்துக் கொள்ளும்
       ஆமைபோல் நினைத்த வாறே
அலைதரும் புலன்கள் ஐந்தும்
       தன்னுளே அடக்கி ஆளும்
கலைதெரிந் தவனே யாகும்
       கலங்கிடா அறிவு கண்டோன்.       5

தம்மிடம் மோகம் கொள்ளா
       ஜீவரை விட்டுத் தாமே
வெம்மைய விஷயம் எல்லாம்
       விலகிடும் எனினும் முன்னே