பக்கம் எண் :

260நாமக்கல் கவிஞர் பாடல்கள்

எச்சரித் திட்ட என்னுடைய நண்பர்கள்
உச்சரித் திட்ட உரைகளை விடுத்தே
இந்தியர் குறைகளை எடுத்துரைத் திடவென
வந்திடும் பெரிய வாக்குடை காங்கிரசில்
அத்தினம் நானும் அமிர்த சரசினில்       60

ஒத்துழைப் பதையே உறுதியாய்க் கொண்டு
தாங்கியே நின்றேன் தருமந்தானென
ஏங்கினேன் ஐயோ ஏமாந் தவனாய்!
மகம்மதி யர்க்குரை வார்த்தையும் பொய்த்தது.
தருமெனப் பஞ்சாப் தருக ணாளரை.       65

அடிப்பது போலும் அழுவது போலும்
நடிப்பினைச் செய்து ஞாயமும் மமுப்பித்
தீங்கிழைத் தவர்க்கே உதவிசம் பளமும்
பாங்குடன் கொடுத்துப் பரிசுகள் அளித்தார்.
இதையெலாங் கண்டபின் இந்தியர்க் களித்த       70

உதவாக் கரையாம் சீர்திருத் தங்களும்
என்னுடை நாடு இன்னமுங் குறைந்து
குன்றிட வென்றே கொடுத்தனர் என்று
கண்டனன் நானும் கருத்திழந் தவனாய்ப்
பண்டைய இந்தப் பாரத நாட்டிடம்.       75

அரசியல் செய்பவர்க் கன்பிலை யென்றும்
உரிமையெம் பணத்தை உரிஞ்சிட வென்றே
அறிந்திட நின்றேன் ஆங்கில ஆட்சியில்
சிறந்தஎன் நேரம் சீர்குலைந் ததுவே!
அன்றியும் இந்த ஆட்சியின் முன்னால்.       80

மாசிலா அவனுடைச் சன்னதி மன்றினில்
ஆங்கில தேசமும் அதனுடன் எண்ணிய
பாங்கின ராகிய இந்தியர் பலரும்
உத்தரம் சொல்ல ஒதுங்கிடும் காலம்
சத்தியம் ஒருநாள் வந்திடும் சத்தியம்.       85