பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 295

கலக மின்றிச் சட்ட திட்டக்
       கட்டுப் பாடும் இன்றியே
கவலை யற்ற சமர சத்தின்
       காட்சி காண நன்றிதே.       4

காந்திதர்ம நெறியைக் காக்கக்
       கடவு ளிட்ட கட்டளை
கருணை யோடு பூமி தானம்
       செய்யக் கோரும் திட்டமே;
ஆய்ந்து பார்க்கின் உலகில் எங்கும்
       அமைதி யற்ற காரணம்
அவர வர்க்கு நிலமி லாத
       ஆத்தி ரத்தின் பேரில்தான்.       5

தானதர்ம ஆசை யேநம்
       தமிழ கத்தின் கல்வியாம்;
தந்து வக்கும் இன்ப மேநம்
       தலைசி றந்த செல்வமாம்;
தீனருக்குப் பூமி கொஞ்சம்
       தான மாகத் தருவதால்
தேச மெங்கும் அமைதி பெற்றுத்
       திருவி லாசம் பெருகுமே.       6

கும்பி வேகும் பசிமி குந்த
       கோப தாபம் எண்ணவே
கொடுமை சேர்பு ரட்சி வந்து
       கொள்ளை போகு முன்னமே
அன்பி னோடு பூமி தானம்
       ஆன மட்டும் செய்வதே
அச்ச மின்றி நாட்டில் எங்கும்
       அமைதி பெற்றே உய்வதாம்.       7

விளைவுமுற்றும் சொந்த மாகும்
விளைநி லங்கள் தந்திடில்