பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 31

II.தமிழ் அமுதம்
17. என்றும் உள்ள தென்றமிழ்

அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
       அன்னை வாழ்க வாழ்கவே.

வைய கத்தில் இணையி லாத
              வாழ்வு கண்ட தமிழ் மொழி
       வான கத்தை நானி லத்தில்
              வரவ ழைக்கும் தமிழ்மொழி
பொய்அ கந்தை புன்மை யாவும்
              போக்க வல்ல தமிழ்மொழி
       புண்ணி யத்தை இடைவி டாமல்
              எண்ண வைக்கும் தமிழ்மொழி
மெய்வ குத்த வழியி லன்றி
              மேலும் எந்தச் செல்வமும்
       வேண்டி டாத தூய வாழ்வைத்
              தூண்டு கின்ற தமிழ்மொழி
தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
              தேடித் தேடி ஆய்ந்தவர்
       தெளிவு கண்ட ஞான வான்கள்
              சேக ரித்த நன்மொழி.       1

உலகி லுள்ள மனிதர் யாவரும்
              ஒருகு டும்பம் என்னவே
       ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
              தொன்று தொட்டுச் சொன்னது;
கலக மற்ற உதவி மிக்க
              சமுகவாழ்வு கண்டது;
       கடமை கற்று உடைமை பெற்ற
              கர்ம ஞானம் கொண்டது
சலுகை யோடு பிறமொ ழிக்கும்
              சரிச மானம் தருவது;