பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 445

XI. பல்சுவைப் பாடல்கள்

272. பகவத் கீதையின் சிறப்பு

பகவத் கீதையைப் படித்திடுவோம்
       பகவான் அருள்பெறத் துடித்திடுவோம்.
மிகவும் நல்லறி வுண்டாகும்
       மீறிய ஆசைகள் துண்டாகும். 1

நால்வகை யோகமும் ஆய்ந்திடலாம்
       நமக்குஎது சரியெனத் தேர்ந்திடலாம்
நூல்களின் எல்லையும் அதுவேயாம்
       நுண்ணறிவு என்பது இதுவேயாம்.       2

‘நான்‘ எனும் அகந்தையைப்போக்கி விடும்
‘நமன்‘எனும் பயத்தையும்நீக்கிவிடும்
‘ஏன்? எது?‘ என்கிற விவஸ்தையும்
‘எப்படி‘ என்பதன்அவஸ்தைஅறும்.3

கவலையை மாற்றிட மந்திரமாம்
கடமையை உணர்ந்திடத்தந்திரமாம்
அவலமும் அச்சமும் அணுகாவாம்
அஞ்ஞா னங்களும்முணுகாவாம்.4

சத்தியம் அறிந்திட வழிகாட்டும்
சாந்தியும் நிறைந்திடஒளிகூட்டும்
நித்தியப் பொருளதன் நிலைதெரியும்
நிம்மதி அடைகிறகலைபுரியும்.5

ஐயமும் திரிபும் மறைந்துஒழியும்
ஆசையும் வெறுப்பும்குறைந்துஅழியும்
வையமும் வானமும் நமதாகும்
வறுமையும் செல்வமும்சமமாகும்.6