ஜாடிக்கு மூடி
ஜாடிக்கு மூடி. சதிருக்கு ஜோடி. பாம்புக்கு மோடி. பறந்துவா ஓடி. வாசிக்க ஏடு. வசித்திட வீடு. பாலுக்கு மாடு. பண்ணாதே கேடு. படிப்புக்குப் போட்டி. வேட்டைக்கு ஈட்டி. கட்டிக்க வேட்டி. கதை சொல்லப் பாட்டி!