பக்கம் எண் :

 

உண்டு

 

                   கரும்பு இருக்கும் இடத்திலே,
                   எறும்பு உண்டு மொய்க்கவே.

                   கண்ணன் தின்னும் உணவிலே,
                   வெண்ணெய் உண்டு முதலிலே.

                  
தோசை சுட்டால் ‘சுர்’ ரென
                   ஓசை உண்டு கேட்கவே.

                   மீசை வெள்ளை ஆகியும்,
                   ஆசை உண்டு வாழவே.

                  
துஷ்ட னான பையனால்,
                   கஷ்டம் உண்டு வீட்டிலே.

                   தெம்பில் லாத பாட்டிக்கு,
                   கம்பு உண்டு கையிலே!

12