பட்டணம்
பட்டணம் பெரும் பட்டணம்.
பலரும் கூடும் பட்டணம்.
கார், குதிரை வண்டிகள்
கணக்கில் லாத பட்டணம்.
புகைவி டாமல் ஊருக்குள்
புகுந்து ஓடும் ரயில்களும்,
மிருகக் காட்சி சாலையும்,
மெத்தப் பெரிய கோட்டையும்,
உயர மான ‘கோர்ட்டு’மே
உள்ள தந்தப் பட்டணம்.
சிறந்த நல்ல பொருள்களைச்
சேர்த்துக் காட்டும் ‘மியூசியம்’
கப்பல் தங்கத் துறைமுகம்,
காற்று வாங்கக் கடற்கரை,
வீதி தோறும் பள்ளிகள்
விளங்கு கின்ற பட்டணம்.
பொட்ட ணத்தைக் கட்டியே
போகப் போறேன் பட்டணம்.
என்ன பட்டணம் தெரியுமா?
சென்னப் பட்டணம் தெரிஞ்சுக்கோ!
|