பக்கம் எண் :


 

நில், நில், நில்.

 

                      நில், நில், நில்.
                      நில்லா விட்டால், உடனே ஓடிச்
                      செல், செல், செல்.

                     
கல், கல், கல்.
                      கல்லடி பட்ட நாயின் சத்தம்
                      ளொள், ளொள், ளொள்.


                     
புல், புல், புல்.
                      புல்லைப் பிடுங்கிப் பூமியை உழுதால்,
                      நெல், நெல், நெல்.

     
                வெல், வெல், வெல்.
                      வென்றது ராமர் கையில் உள்ள
                      வில், வில், வில்.

     
                சொல், சொல், சொல்.
                      சொல்லித் தந்த பாட்டிக் கெங்கே
                      பல், பல், பல்?
 

3