| |
| |
| | குவிபடு கையாற் கும்பிட் டெழுந்து | |
| | சங்கம் புக்குத் தமிழே டனைத்தும் | 75 |
| | பொங்கும் மகிழ்வால் பொன்னியின் செல்வன் நுண்ணிதின் நோக்கினன் கண்களி கொள்ளச் சுவடியொன் றுற்றது துள்ளிக் குதித்தனன்; | |
| | இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ? | |
| | | |
| | மீனவன் எக்களிப்பு | |
| | | |
| | தவலரும் உவகை தன்னகம் நிறைக்கத் | |
| | குழந்தை யாகினன்; இருகை கொட்டி, | 80 |
| | இழந்ததைப் பெற்றேன் இனித்துயர் இல்லைஎன் றாடினன் பாடினன் அவையகம் மறந்தே; தேடிய சுவடி ஓடிவந் துறலால் வாடிய அவன்மனம் கூடித் தளிர்த்தது; | |
| | துயரக் கடலுள் மூழ்கித் துடிக்கும் | 85 |
| | அமயத் தொருமரக் கலமென அவற்குச் சுவடி துணைசெயச் சோர்வகன் றனனே; `என்தாய்ப் பழிப்போர் இனியிரார் உலகில், பொன்றாப் புகழ்நூல் புகுந்ததென் கையில், | |
| | இசையும் கூத்தும் இலங்கிய தமிழோ | 90 |
| | வசைபெறக் காண்பது? வையகம் எங்கும் முழக்குவென் முழக்குவென் முத்தமிழ்ப் பெருமை, சழக்கார் பகைஎலாம் தவிடெனப் பொடியென ஆக்குவென், எதிர்ப்பெலாம் நீக்குவென், மாசினைத் | |
| | தீக்கிரை யாக்கித் தேனிசை பாடுவென்' | 95 |
| | என்றவன் செம்மாந் தேறென எழுந்தனன்; கூடல் நகரெலாம் கொற்றவன் தமிழிசைப் பாடல் ஒலியே பரந்தது கண்டு வாயடங் கினரே வாதுகள் செய்தோர்; | |
| | தாயினும் மேலாத் தமிழினை விழைவோன் | 100 |
| | இசையின் இயலெலாம் இசைத்தவண் இருப்புழித் | |
| --------------------------------------------------------------- |
| | தவலரும் - குறையற்ற, பொன்றா - அழியாத, சழக்கர் -கயவர். | |
| | | |