| 16. எழிலியின் வரலாறறிந்த காதை | 
                  |  | 
                  |  | இசைச் செல்வி |  | 
                  |  |  |  | 
                  |  | கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன்
 திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ!
 அறமனச் செல்வி, அழகின் விளைநிலம்
 |  | 
                  |  | எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் | 5 | 
                  |  | இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில்
 ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள்,
 மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில்
 |  | 
                  |  | ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி | 10 | 
                  |  | ஈங்குன துளம்யாது?' என்றலும் உரைப்போள் |  | 
                  |  | இசைவய மாக ஈர்க்குந் திறத்தினள், நரம்பிசை பிழையாக் குரலால் நெஞ்சம்
 உருக இன்னிசை ஓதும் பெற்றியள்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | எதிர்ப்பெலாங் கடந்தாள் |  | 
                  |  |  |  | 
                  |  | மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச் |  | 
                  |  | செல்வர் சிலரும் செய்தி இதழரும் | 15 | 
                  |  | மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது தொழிலாக் கொண்டனர் தொல்லைகள் தந்தனர்;
 புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள்;
 தன்கண் வருவாய் தழைவது வேண்டிலள்;
 |  | 
                  |  | அதனை விழைவோர் தாமே அஞ்சுவர்? | 20 | 
                  |  | எதையும் அஞ்சிலள் எடுத்தநற் பணியில் ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | எழிலி - அழகி, இசையால் - பாட்டால், இசையாள் - புகழுடையாள், மன்றினில் - அரங்கினில், ஈர்க்கும் - கவரும், செய்தி இதழர் - பத்திரிகையாளர், புன்கண் - துன்பம், தன்கண் - தன்னிடம். |  | 
                  |  |  |  |