| |
| | பன்னரும் துயரப் பாடுகள் அடைந்து தேடிக் கொணர்தரும் பீடுயர் ஏடு நாடிப் புகலும் நற்றமிழ் இசையின் | |
| | நுணுக்கம் அனைத்தும் நுவன்றனள் இருந்துழி; | 50 |
| | | |
| | சண்டிலி வருகை | |
| | | |
| | மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி | |
| | சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித் | 55 |
| | | |
| | சண்டிலி வேண்டுகோள் | |
| | | |
| | `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும் | |
| | சேர்த்தருள் செய்'கெனச் சேயிழை வேண்டலும், | 60 |
| | | |
| | பூங்கொடி அருளல் | |
| | | |
| | `வருக தோழி வாழ்கநின் வேட்கை! வருவோர் தமக்கெலாம் தமிழிசை வழங்குதல் தொழிலாப் பணியாத் தொடங்கினம் இதனை; பிழையாப் பயனும் விளையா நின்றது | |
| | கண்டுளங் களிக்கும் காலை எம்முழைச் | 65 |
| | சண்டிலி நீயும் சார்ந்தனை வாழி;! அயன்மொழி பேசும் அரிவைநீ யாயினும் வியன்பெருங் காதல் விருப்பொடு வந்தனை, பயிலுங் குழுவினுள் பாங்குடன் நீயும் | |
| | குயிலிசை பயில்கெனக் கூறினள் பூங்கொடி; | 70 |
| --------------------------------------------------------------- |
| | தண்ண்ணிய - குளிர்ந்த (ஒற்றளபெடை) தையாஅல் - பூங்கொடியே!, சேயிழை - சண்டிலி. | |
| | | |