| |
| | வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண் தானது என்னத் தயங்கி நின்றிடும்; | |
| | விலங்கினம் அன்றி வழங்குதல் இன்மையின் | 145 |
| | கலங்கினென் ஆயினும் காணாஅ இன்பமும் அலைவுறும் மனத்தில் அளப்பரும் அமைதியும் நிரம்பிய தாதலின் நெடும்பொழு திருந்தேன் திரும்பவும் நினையின் அரும்பிடும் அந்நிலை; | |
| | | |
| | சிற்றருவி | |
| | | |
| | சிற்றருவி என்று செப்பிடும் ஒன்று | 150 |
| | மற்றொரு பாங்கரின் உற்றது கண்டு பற்றொடு சென்று பைம்புனல் ஆடினம்; உருவம் சிறிதென உள்ளினென் நிற்ப அருவியின் வேகம் அறியா என்றன் | |
| | கூந்தலும் ஆடையும் குலைத்துடன் வீழ்த்த | 155 |
| | இடுக்கண் வருங்கால் இமைப்பில் வந்துடன் தடுக்கும் நட்பினை நிகர்க்கும் கைகள் உடுக்கையைக் காத்தன; உருவுகண் டெள்ளுதல் வடுப்படு செயலெனும் வாய்மொழி உணர்ந்தேன்; | |
| | | |
| | ஐந்தருவி | |
| | | |
| | செந்தமிழ் ஒன்றே தெலுங்குடன் கன்னடம் | 160 |
| | சந்தம் மிகுமலை யாளம் துளுவென வந்தது போல வாய்ந்தஓர் அருவி ஐந்து கிளையாய் ஐந்தருவி என்னத் தவழ்ந்திடல் கண்டு தனித்தனி அவற்றிற் | |
| | சிவந்திட விழிகள் சிலபொழு தாடினம்; | 165 |
| | | |
| | மாலைக் காட்சி | |
| | | |
| | இங்ஙனம் இனிமையில் இருந்துழி ஒருநாள் பொங்குமா கடலெனப் பொங்குபே ரருவியில் | |
| --------------------------------------------------------------- |
| | நிவந்த - நிமிர்ந்த, வால் - தூய்மை. | |
| | | |