| |
| | நிலைத்ததம் பொருளெலாம் நீரென இறைத்துப் | |
| | பேரின் புறூஉம் பெருநிலக் கிழார்பால் | 105 |
| | நேரிற் சென்று நேரிழை இசைத்திறன் கூறுதும் என்று கூடினர் ஏகி, | |
| | | |
| | பெருநிலக்கிழார் மாளிகை | |
| | | |
| | வங்க வினைஞரும், வச்சிரத் தச்சரும், கொங்கக் கொல்லரும், குளிர்மலை யாளரும், | |
| | தமிழக வினைஞர் தம்மொடு கூடிப் | 110 |
| | புகழ்பெறு மாறு புதுமையின் இயற்றிய கண்கவர் வனப்பிற் கைவினை முற்றிய விண்தவழ் முகப்பும் வியன்பெரு வாயிலும், வெண்சுதைப் பாவை விளங்கிடும் அரணும், | |
| | ஒள்ளிய சாந்து வெள்ளிய நிலவொளி | 115 |
| | அள்ளி இறைக்கும் அழகுறு மதிலும், திரள்பெருந் தூணிற் செய்வினைப் போதிகை மருள்படச் செய்யும் மனங்கவர் சித்திர விதானப் பரப்பொடு விளங்குநல் மண்டபத்துக் | |
| | | |
| | ஆடல் அரங்கு | |
| | | |
| | கண்ணுள் வினைஞர் கைத்திறத் தியற்றிய | 120 |
| | வண்ண ஓவியம் வகைவகை துலங்கும் எண்ணருந் திறத்த எழினிகள் நாலப் பின்னரும் முன்னரும் பேரொளி காலும் பன்னிற விளக்கம் பாங்குற விளங்கக் | |
| | கற்பனை தோற்கக் கண்கவர் முறையில் | 125 |
| | பொற்புடன் அமைத்த பொன்னிற அரங்கில் ஆடற் கூத்தும், அவிநயக் கூத்தும், நாடகக் கூத்தும், நல்லிசைப் பாட்டும் கண்டுங் கேட்டுங் களிப்பினில் திளைத்துத் | |
| | திண்டும் அணையும் சேர்தரும் அமளியில் | 130 |
| --------------------------------------------------------------- |
| | விதானம் - உள் மேற் கூறை, எழினி - திரைச்சீலை, நால - தொங்க. | |
| | | |